• June 14, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ஈரான் மீதான தாக்குதல் தொடுத்து வரும் இஸ்ரேலின் வன்முறைப் பாதை கண்டிக்கத்தக்கது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், “ஈரான் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் தாக்குதல்கள் பெரும் போரை மூளச் செய்யும் பொறுப்பற்ற செயலாகும். ஏற்கெனவே காசாவில் தொடர்ந்து குண்டுகளை வீசி, பாலஸ்தீன மக்கள் அல்லலுற்று வரும் வேளையில் இஸ்ரேலின் இந்த வன்முறைப் பாதை கண்டிக்கத்தக்கது. உலக நாடுகள் அனைத்தும் இதை கட்டுப்படுத்தவும், நீதிக்கும், பொருள் பொதிந்த பேச்சுவார்த்தைக்கும் வலியுறுத்த வேண்டும். இனி வேண்டாம் போர்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *