• June 14, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: நீலகிரி மாவட்டத்தில் நாளை (ஜூன் 15) ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஈரோடு, சேலம், தருமபுரி, திருப்பூர், திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பதிவாகியுள்ளது. தென்மேற்கு பருவமழை மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் தீவிரமாக இருந்தது. மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அநேக இடங்களிலும், இதர தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் மழை பெய்துள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *