• June 13, 2025
  • NewsEditor
  • 0

விழுப்புரம்: கனியாமூர் தனியார் பள்ளி வன்முறை வழக்கு விசாரணையில் 41 சிறுவர்கள் விழுப்புரம் இளஞ்சிறார் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதையடுத்து வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 8-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தில் வசித்த 17 வயது சிறுமி, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூர் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர், கடந்த 13-07-22-ம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு, ஜுன் 17-ம் தேதி மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *