• June 12, 2025
  • NewsEditor
  • 0

‘Mayday’ என்றால் என்ன?

அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்ட விமானம் ‘Take Off’ ஆன சில நொடிகளிலேயே அருகிலிருந்த மேவானி குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியிருக்கிறது. விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கப்போவதை அறிந்த விமானி ‘Mayday’ என கடைசியாக கூறியிருக்கிறார். விமானப் போக்குவரத்தைப் பொறுத்தவரை இது ஒரு அவசர கால அழைப்பு.

Ahmedabad Plane Crash

‘Mayday’ என்றால் என்ன?

‘Mayday’ என்கிற வார்த்தை விமானப் போக்குவரத்தில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆபத்து கால குறியீட்டு வார்த்தை ஆகும். இந்த ‘Mayday’ என்கிற வார்த்தை ‘m’aider’ என்கிற பிரெஞ்சு வார்த்தையிலிருந்தே பிறந்தது. இதற்கு ‘help me – உதவி செய்யுங்கள்.’ எனப் பொருள். லண்டன் விமான நிலையைத்தை சேர்ந்த ரேடியோ ஆபிசர் ஃப்ரெட்ரிக் ஸ்டான்லி மாக்ஃபோர்ட் என்பவரே இதை அறிமுகப்படுத்தினார். 1927 முதல் அவசரகால குறியீட்டு அழைப்பாக இந்த ‘Mayday’ என்கிற வார்த்தை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இயந்திரக் கோளாறு, தீ விபத்து, விமானக் கட்டுப்பாட்டை இழக்கும் நிலை போன்ற கையை மீறி செல்லும் அவசரச் சூழல்களில் விமானிகள் கட்டுப்பாட்டு அறைக்கு ‘Mayday, Mayday, Mayday’ என மூன்று முறை தகவல் சொல்வார்கள். இந்தத் தகவல் கிடைக்கப்பெற்றவுடன் கட்டுப்பாட்டு அறையிலிருந்து ஒட்டுமொத்த கவனமும் அந்த விமானத்தின் மீது குவிக்கப்படும். அவசர காலங்களில் என்னென்ன முன்னேற்பாடுகளை செய்ய வேண்டுமோ அதையெல்லாம் கட்டுப்பாட்டு அறையிலிருந்து செய்துவிடுவார்கள். மருத்துவக்குழுவினர், மீட்புப்படையினர் என எல்லாருமே தயாராகிவிடுவார்கள்.

Ahmedabad Plane Crash
Ahmedabad Plane Crash

அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் விமானியும் முறையாக ‘Mayday’ அழைப்பை விடுத்திருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *