
பாட்னா: பிஹார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் நேற்று தனது 78-வது பிறந்த நாளை பாட்னாவில் உள்ள தனது இல்லத்தில் கொண்டாடினார். அப்போது முற்றிலும் லட்டுகளால் தயாரான 78 கிலோ கேக்கை அவர் வாளால் வெட்டினார்.
இது தொடர்பான வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் 'லாலு யாதவ் ஜிந்தாபாத்' என்ற வாழ்த்து முழக்கத்துக்கு மத்தியில் அவர் மிகப் பெரிய கேக்கை வாளால் வெட்டுவதை காண முடிகிறது.