• June 12, 2025
  • NewsEditor
  • 0

நம் உடலில் உள்ள எலும்புகளின் இயக்கத்திற்கும், தசைகள் சீராக இயங்குவதற்கும் தேவைப்படும் முக்கியமான மினரல் மெக்னீஷியம். உடலில் மெக்னீஷியம் குறைபாடு ஏற்படுவது பல்வேறு அறிகுறிகள் மூலம் வெளிப்படும். ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பதைப் போல, மெக்னீஷியம் குறைபாடு இருந்தால் அது உங்கள் முகத்திலேயே தெரிந்துவிடும்’ என்கிற உணவியல் நிபுணர் பாலபிரசன்னா, மெக்னீஷியம் நிறைந்த உணவுகள், குறைந்தால் வரக்கூடிய அறிகுறிகள், தீர்வுகள் குறித்து பேசினார்.

மெக்னீஷியம் குறைபாடு

”பெரும்பாலானவர்களுக்கு அவர்களின் கண் இமைகள் தன்னிச்சையாக துடிக்கும். இது மெக்னீஷியம் குறைபாட்டினால் ஏற்படுவதுதான். கண்களுக்கு ரத்த ஓட்டம் சரியாகச் செல்லாது. கண்கள் எரிச்சலாகவும், மிகவும் வறண்டும் இருக்கும். மெக்னீஷியம் இருந்தால் மட்டுமே கண் தசைகள் சரியாக இயங்கும்.

மெக்னீஷியம் உடலின் திரவ நிலையைச் சீராக்கப் பயன்படுகிறது. இது குறையும்போது உடலின் திரவத்தன்மை அதிகரித்து, முகம் மற்றும் கண்களைச் சுற்றி வீக்கம் ஏற்படும்.

கண்களைச் சுற்றி கருவளையம் ஏற்படுவது தூக்கமின்மை மற்றும் சோர்வினால் மட்டுமல்ல, மெக்னீஷியம் குறைபாட்டினாலும் ஏற்படும்.

மெக்னீஷியம் நரம்பு தூண்டுதலுக்கு உதவுவதோடு, மனநிலையைச் சீராக வைப்பதற்கும், இதயத்தைச் சீராக இயங்க வைப்பதற்கும் உதவுகிறது.

மெக்னீஷியம் நிறைந்த உணவுகள்
மெக்னீஷியம் நிறைந்த உணவுகள்

மெக்னீஷியம் குறைபாடு இருந்தால் முகத்தில் தோல் சுருக்கம், பொலிவின்மை ஏற்பட்டு சீக்கிரமே வயதான தோற்றம் ஏற்படும்.

உடலில் போதுமான அளவு மெக்னீஷியம் இருந்தால், தோல் சம்பந்தமான நோய்கள், முகப்பரு, எக்ஸிமா போன்றவை வராமல் தடுக்கும். அரிப்பு மற்றும் சிவப்புத்திட்டுகளும் ஏற்படாது.

முடி வளர்ச்சியில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது மெக்னீஷியம். இது குறைந்தால் புருவங்களில்கூட முடி கொட்டும்.

மெக்னீஷியம் குறைந்தால் உதடு வறண்டு, வெடிப்பு ஏற்படுவதோடு, தாடை இறுக்கமாக இருப்பது போன்ற பிரச்னைகளும் வரும்.

உணவியல் நிபுணர்  பாலபிரசன்னா
உணவியல் நிபுணர் பாலபிரசன்னா

இந்த அறிகுறிகள் உங்களுக்கும் இருந்தால், உடனடியாக ஒரு மருத்துவரை சந்தித்து, மெக்னீஷியம் குறைபாடு இருப்பதை உறுதி செய்துகொண்டு, தினமும் 200 முதல் 400 மில்லிகிராம் வரை மெக்னீஷியம் சப்ளிமென்ட் எடுத்துக்கொள்ளலாம். கூடவே, போதுமான அளவு நீரை உட்கொள்ள வேண்டும். உப்பு அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். கீரை வகைகள், நட்ஸ், அவகாடோ, பயறு மற்றும் சிறுதானியங்களை அன்றாட வாழ்வில் சேர்த்துகொள்ள வேண்டும்” என்கிறார் உணவியல் நிபுணர் பாலபிரசன்னா.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *