• June 10, 2025
  • NewsEditor
  • 0

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்றைய லீக் போட்டியில், சேப்பாக் சூப்பர் கில்லிஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. கோவையில் இதற்கு முன்பு நடைபெற்ற 5 லீக் போட்டிகளிலும் சேஸ் செய்த அணிகளே வெற்றி பெற்றன. அதனால் டாஸ் வென்ற நெல்லை அணி பௌலிங் தேர்வு செய்தது.

சேப்பாக்

சேப்பாக் அணிக்கு கடந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய மோகித் ஹரிஹரன் 2 ரன்களில் அவுட்டாகி வெளியேறினர். மறுபக்கம் ஆஷிக், கேப்டன் அபரஜித் பார்ட்னர் ஷிப் அமைத்து ரன்களை சேர்த்தனர். ஆஷிக் 54 ரன்களும், அபாரஜித் 41 ரன்களும் எடுத்து அவுட்டாகினர்.

மிடில் ஓவர்களில் விஜய் சங்கரும், ஸ்வப்னில் சிங் இணை அதிரடி காட்டியது. ஸ்வப்னில் சிங் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணியில் இடம்பெற்றிருந்தார். சாம்பியன் டீமில் இருந்து வருகிறேன், என்பதை வெளிப்படுத்தும் விதமாக அவர் ஆரம்பத்தில் இருந்தே அதிரடி காட்டினார். அவர் 14 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 2 ஃபோர்களுடன் 45 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். விஜய் சங்கர் 24 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 2  ஃபோர்களுடன் 47 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

சேப்பாக் அணி

இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்தது. இந்த சீஸனில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுதான். நெல்லை அணிக்காக யுதிஸ்வரன் 3, சோனு 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

ஆல் ரவுண்ட் பெர்ஃபார்மன்ஸ்!

213 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய நெல்லை அணி ஆரம்பம் முதலே தடுமாறியது. கேப்டன் அருண் கார்த்திக் மட்டும் சற்று நிலைத்திருக்க, மறுமுனையில் அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்து கொண்டே இருந்தன. நெல்லை அணிக்கு அதிகபட்சமாக அருண் 51 ரன்கள், முகமது அதான் கான் 48 ரன்கள் எடுத்தனர். சேப்பாக் அணிக்கு அபிஷேக் தன்வார் அதிகபட்சம் 3 விக்கெட்கள் வீழ்த்தினார். ஸ்வப்னில் சிங் பௌலிங்கிலும் 2 விக்கெட்கள் எடுத்து அசத்தினார்.

ஸ்வப்னில் சிங்
நெல்லை அணி
நெல்லை அணி

சிலம்பரசனும் 2 விக்கெட்கள் எடுத்து வெற்றிக்கு உதவினார். சேப்பாக் அணியின் ஃபீல்டிங்கும் சிறப்பாக இருந்தது. 20 ஓவர்கள் முடிவில் நெல்லை அணி 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 41 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் அணி வெற்றி பெற்றது. இந்த சீஸனில் முதலில் பேட்டிங் செய்து வெற்றி பெற்ற முதல் அணி என்ற  பெருமையுடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தையும் பிடித்துள்ளனர்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *