• June 6, 2025
  • NewsEditor
  • 0

நடிகர் நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனியின் திருமணம் இன்று(ஜூன்6) நடைபெற்று முடிந்திருக்கிறது.

சமீபத்தில்தான் நடிகர் நாகார்ஜுனா – நடிகை அமலா தம்பதியினரின் மூத்த மகனான நாக சைதன்யா – சோபிதா துலிபலா இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

அக்கினேனி – ஜைனப் ரவ்ட்ஜி

இந்நிலையில் இன்று அவர்களது இளைய மகனான அகில் அக்கினேனி  – ஜைனப் ரவ்ட்ஜி இருவருக்கும் திருமணம் நடைபெற்றிருக்கிறது. ஹைதராபாத்தில் உள்ள நாகார்ஜுனாவில் வீட்டில் எளிமையாகத் திருமணம் நடைபெற்றிருக்கிறது. 

நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே இந்தத் திருமணத்தில்  கலந்து கொண்டுள்ளனர். அக்கினேனி – ஜைனப் ரவ்ட்ஜி பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

மணமகள் ஜைனப் , மும்பையில் ஒரு ஓவியராகவும் வாசனை திரவியம் தயாரிப்பாளராகவும் உள்ளார். அவர் ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சுல்பி ராவ்ஜியின் மகள் ஆவார்.

அக்கினேனி  - ஜைனப் ரவ்ட்ஜி
அக்கினேனி – ஜைனப் ரவ்ட்ஜி

வரும் ஜுன் 8ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள நாகார்ஜுனா குடும்பத்தினருக்குச் சொந்தமான அன்னபூர்ணா ஸ்டுடியோஸில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

கடந்த மூன்று வருடங்களாக அகில், ஜைனப் காதலித்து வந்தனர். கடந்த வருடம் இருவருக்கும் திருமண நிச்சயம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *