அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் உலகின் நம்பர் ஒன் பணக்காரரும், ட்ரம்பின் நண்பருமான எலான் மஸ்க் நட்பில் விரிசல் உண்டாகி உள்ளது.
இருவருக்கும் சமூக வலைதளத்தில் வார்த்தைப் போர் முற்றி வருகிறது. அதில் ஒன்றாக எலான் மஸ்க், “ட்ரம்ப் பற்றி இப்போது ஒரு உண்மையைச் சொல்லியாக வேண்டும். ட்ரம்பின் பெயர் எப்ஸ்டீன் ஃபைலில் உள்ளது.
அது தான், அந்த ஃபைலை பொதுவெளியில் வெளியிடாததற்கான முக்கிய காரணம். ஹேவ் ஏ நைஸ் டே DJT” என்று பதிவிட்டிருந்தார். DJT என்று அவர் குறிப்பிடுவது டோனால்ட் ஜெ. ட்ரம்பைத் தான்.
அடுத்ததாக, “இந்தப் போஸ்டை குறித்து வைத்துகொள்ளுங்கள். உண்மை வெளியே வரும்” என்று பதிவிட்டிருந்தார். அதை ரீ-ட்வீட் செய்து ஒருவர், “ட்ரம்ப் அதிபர் பதவியில் இருந்து விலக வேண்டும். அவருக்குப் பதிலாக, ஜே.டி.வான்ஸ் அதிபர் பதவிக்கு வர வேண்டும்” என்று கூறியுள்ளார். அதற்கு எலான் மஸ்க், ‘ஆம்’ என்று ஆதரவு தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க் குறிப்பிடும் எப்ஸ்டீன் ஃபைல் என்ன?
ஜெஃப்ரி எப்ஸ்டீன் குழந்தைகளைப் பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுப்பவர் மற்றும் குழந்தைகளைக் கடத்துபவர் ஆவர். இளம்பெண்களைப் பாலியல் வன்புணர்வு செய்த ஏகப்பட்ட குற்றங்கள் அவர் மீது உள்ளன. அவர் குழந்தைகளைக் கடத்துவது அரசியல்வாதிகள், பிசினஸ்மேன்கள், பிரபலங்களுகாக என்று கூறப்படுகிறது.
இவரது ஃபைலில் தான் ட்ரம்ப் பெயர் உள்ளது என எலான் மஸ்க் பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.