• June 5, 2025
  • NewsEditor
  • 0

மாமல்​லபுரம்: மாமல்​லபுரம் அடுத்த பூஞ்​சேரி பகு​தி​யில் உள்ள தனி​யார் நட்​சத்​திர விடு​தி​யில் 2-ம் கட்​ட​மாக 10 மற்​றும் 12-ம் வகுப்பில் சிறந்த மதிப்​பெண்​கள் பெற்ற மாணவ, மாணவி​களுக்கு தமிழக வெற்​றிக் கழகம் கட்​சி​யின் தலை​வர் விஜய் கல்வி விருது மற்​றும் பாராட்டு சான்​றுகளை வழங்​கி​னார்.

தமிழகம் மற்​றும் புதுச்​சேரி​யில் 10 மற்​றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்​வில் தொகுதி வாரி​யாக சிறந்த மதிப்​பெண்​கள் பெற்று தேர்ச்​சி​யடைந்த மாணவ, மாணவி​களுக்​கு, தமிழக வெற்​றிக் கழகத்​தின் சார்​பில், கல்வி விருது வழங்​கும் விழா, 2-ம் கட்​ட​மாக மாமல்​லபுரம் அருகே பூஞ்​சேரி உள்ள தனி​யார் நட்​சத்​திர விடு​தி​யில் நேற்று நடை​பெற்​றது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *