• June 5, 2025
  • NewsEditor
  • 0

’’கர்ப்பிணிப்பெண்கள், உடல் பருமன் உள்ளவர்கள் மற்றும் ஒரே இடத்தில் நின்று வேலை செய்பவர்களுக்கு வெரிகோஸ் வெயின்ஸ் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். காலின் தோலுக்கு அடியில் ரத்தம் மேலும் கீழும் செல்ல முடியாமல் ஒரே இடத்தில் தேங்குவதால் அந்த இடத்தைச் சுற்றி நரம்புகள் சுருண்டு விடும். இதையே வெரிகோஸ் வெயின்ஸ் என்கிறோம்.

இது, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு வந்தால், நாளடைவில் அந்த இடமே பச்சை நிறத்தில் மாறி நரம்புகள் சுருண்டு, அந்த இடம் முழுவதுமே புண்ணாகிவிடும்.

ஆரம்ப காலத்திலேயே இதைச் சரி செய்ய வேண்டும்; இல்லையென்றால் கஷ்டமாகிவிடும்.சில இயற்கை மருத்துவ முறைகளைப் பயன்படுத்தினால், இதைச் சரி செய்துவிடலாம்’’ என்கிற இயற்கை மருத்துவர் யோ.தீபா, அந்த முறைகள்பற்றி விளக்குகிறார்.

உடல் எடை

ஒரு காட்டன் துணியை மூன்று மீட்டர் வரை நீளவாக்கில் கிழித்து, அதை நீரில் நனைத்து, நரம்பு சுருண்டிருக்கும் இடத்தைச் சுற்றிக் கட்ட வேண்டும். பிறகு அதன் மேல் உலர்ந்த துணியால் மூடி, 45 நிமிடங்கள் வரை வைக்க வேண்டும்.

இந்த கோல்டு லெக் பேக்கை ஆன்லைன் மூலமாகவும் வாங்கிக்கொள்ளலாம். இதை தினசரி செய்து வந்தால், ரத்தநாளங்களில் ரத்தம் எங்கும் தடைபடாமல் செல்ல ஆரம்பிக்கும். இதனால், சுருண்ட நரம்புகள் படிப்படியாக சரியாகும். சாப்பிட்ட உடனே இதை செய்யக்கூடாது; சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து இதைச் செய்யலாம் அல்லது சாப்பிடுவதற்கு முன்னால் செய்யலாம்.

மண்ணை உடல் முழுவதும் பூசிக்கொண்டு வெயிலில் உட்கார வேண்டும். இந்த மண் சிகிச்சை முறையைச் செய்தால், பிற்காலத்தில் அறுவை சிகிச்சைகூட தேவைப்படாமல் வெரிகோஸ் வெயின் சரியாகலாம். தவிர,அக்குபஞ்சர் சிகிச்சையைச் செய்தால் அது ரத்த அடைப்புகளைச் சரி செய்யும்; இதனால், வெரிகோஸ் வெயின் பிரச்னை பெரிதாகாமல் தடுக்கலாம்.

மசாஜ்
மசாஜ்

லாவண்டர் எண்ணெய், லெமன் கிராஸ் எண்ணெய் வைத்து அந்தப் பகுதியில் மசாஜ் செய்தால், எளிதில் தளர்ந்த நரம்புகளை சரி செய்யலாம். இயற்கை மருத்துவத்தில் செய்யப்படுகிற ஸ்வீடிஷ் மசாஜை தினசரி 15 நிமிடங்கள் செய்து வந்தால், சுருண்ட ரத்தநாளங்கள் மெள்ள மெள்ள பழைய நிலைக்குத் திரும்பும்.

50 கிராம் நல்லெண்ணெய் எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதில் 2 பிரண்டைத் துண்டுகள் போட்டு, கூடவே10 கிராம் இஞ்சியை இடித்துச் சேர்த்து, மூன்று நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பிறகு, அதை வடிகட்டி, ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்து, தினமும் சிறிதளவு எடுத்து லேசாக சூடு செய்து, வெரிகோஸ் வெயின் பாதிப்பு உள்ள இடத்தில் பூசிக்கொள்ளலாம். இதனால், நாளடைவில் வலி மற்றும் நரம்பு சுருள் குறையும்.

யோகா
யோகா

உத்தான பாதாசனம் மற்றும் சலபாசனம் போன்ற யோகா முறைகளைப் பயன்படுத்தி, வெரிகோஸ் வெயினை சரி செய்யலாம். ஆனால், நான் இங்கே சொல்லியுள்ள குறிப்புகளை ஓர் இயற்கை மருத்துவரின் நேரடி ஆலோசனைப் பெற்று செய்துவந்தால், சீக்கிரம் குணமடைய வாய்ப்பிருக்கிறது’’ என்கிறார் டாக்டர் தீபா.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *