• June 5, 2025
  • NewsEditor
  • 0

‘தக் லைஃப்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக 793 இணையதளங்கள் மற்றும் கேபிள் டிவிகளில் வெளியிடுவதை தடுக்க இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிடக்கோரி, ‘தக் லைஃப்’ தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார்ராமமூர்த்தி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, உலகம் முழுவதும் 3 ஆயிரத்து 500 திரையரங்குகளில் ‘தக் லைஃப்’ திரைப்படம் வெளியாக உள்ளது. அதிக பொருட்செலவில் படத்தைதயாரித்துள்ளதால், திருட்டுத்தனமாக, சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியானால் பெருத்த நஷ்டம் ஏற்படும். இதன்மூலம் திரைப்படத் தொழிலை நம்பியுள்ள திரைக் கலைஞர்களின் குடும்பமும் பாதிக்கப்படும் என்றார்.
அதையடுத்து ‘தக் லைஃப்’ படத்தை சட்டவிரோதமாக 793 இணையதளங்கள் மற்றும் கேபிள் டிவிகளில் வெளியிட தடை விதித்தும், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இணையதள சேவை நிறுவனங்களுக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *