
சென்னை: கர்நாடக திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் நரசிம்மலுவுக்கு நடிகர் கமல்ஹாசன் எழுதியுள்ள கடிதத்தில், கன்னடம் குறித்த தனது கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், '30/05/2025 தேதியிட்ட உங்கள் கடிதத்தை நான் படித்தேன். கர்நாடக மக்கள் மீது ஆழ்ந்த மரியாதையுடன், நேர்மையுடன் நான் பின்வருவனவற்றை கூறுகின்றேன்.