• June 2, 2025
  • NewsEditor
  • 0

‘ஓய்வை அறிவித்த க்ளாசென்!’

33 வயதான தென்னாப்பிரிக்க வீரரான ஹென்றிச் க்ளாசென் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.

Klassen

‘குடும்பத்துடன் நேரம் செலவழிக்க…’

இதுசம்பந்தமாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறேன். இது எனக்கு சோகமான நாள்தான். ஆனால், இது சம்பந்தமாக நீண்ட நாட்களாக யோசித்துக் கொண்டிருந்தேன். எனக்கும் என்னுடைய குடும்பத்தின் வருங்காலத்துக்கும் எது சிறந்ததோ அதை செய்ய வேண்டும் என நினைக்கிறேன். இது கடினமான முடிவுதான். ஆனாலும் இந்த முடிவினால் நான் ஆசுவாசமடைகிறேன்.

ஒரு சிறுவனாக என்னுடைய தேசத்துக்காக ஆட வேண்டும் என்பதுதான் பெரிய கனவாக இருந்தது. தேசத்தை பிரதிநிதித்துவப்படுத்த தொடங்கிய அந்த முதல் நாளிலிருந்தே அதை ஒரு பெருமிதமாகத்தான் நினைத்திருக்கிறேன். தென்னாப்பிரிக்க அணிக்காக ஆடிய காலத்தில் நிறைய நல்ல நட்புகளையும் உறவுகளையும் சந்தித்திருக்கிறேன். என் வாழ்க்கையையே மாற்றிய மனிதர்களை இங்கேதான் சந்தித்திருக்கிறேன்.

Klassen
Klassen

அவர்களுக்கெல்லாம் எப்படி நன்றி சொல்வேன் என தெரியவில்லை. நான் தென்னாப்பிரிக்க அணியின் ஜெர்சியை அணிந்ததன் பின்னால் நிறைய பயிற்சியாளர்களின் பங்களிப்பு இருக்கிறது. அவர்களுக்கெல்லாம் என்றைக்கும் கடமைப்பட்டிருக்கிறேன்.

Klassen
Klassen

தென்னாப்பிரிக்காவின் இலச்சினை பொறித்த ஜெர்சியை அணிந்து ஆடியதுதான் என் வாழ்வின் மிகப்பெரிய கௌரவம் என நினைக்கிறேன். இனி என்னுடைய குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும் என நினைக்கிறேன். தென்னாபிரிக்க அணியின் ஆதரவாளனாக எப்போதும் இருப்பேன். எனக்கு உறுதுணையாக இருந்த அத்தனை பேருக்கும் நன்றி.’ எனக் கூறியிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *