• June 2, 2025
  • NewsEditor
  • 0

மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தக் லைப்’.

இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ஜூன் 5-ம் தேதி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இயக்குநர் மணிரத்னம் தனது 69-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

மணிரத்னம்

சினிமாப் பிரபலங்கள் பலரும் மணிரத்னத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கமல்ஹாசன் மணிரத்னத்திற்கு தனது பிறந்தநாள் வாழ்த்தைத் தெரிவிக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” நாயகன் முதல் தக் லைஃப் வரை குடும்பம், கனவு காண்பவர்கள் என்பதையும் தாண்டி சினிமாவின் மாணவர்களாக ஒன்றாக பயணித்துள்ளோம். உங்களின் துணை எனக்கு பலம் கொடுத்துள்ளது.

உங்களின் கதைகள் தொடரட்டும். உங்களின் ஒவ்வொரு ஃப்ரேமும் அழகையும், சினிமாவுக்கான அர்த்தத்தையும் கொடுக்கட்டும். பிறந்தநாள் வாழ்த்துகள் மணிரத்னம்” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *