• June 1, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: புதுடெல்லியின் 'மதராசி கேம்ப்' குடியிருப்பாளர்களில் உள்ள தமிழர்கள் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு திரும்ப விரும்பினால், அவர்களுக்கு அரசு உதவிக்கரம் நீட்டும் என்றும், வாழ்வாதாரம் மற்றும் தேவையான பிற அடிப்படை உதவிகளும் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘மதராசி கேம்ப்’ என்பது தெற்கு டெல்லி, நிஜாமுதீன் ரயில்வே நிலையத்துக்கு அருகிலுள்ள பராப்புல்லா ஜங்க்புரா வடிகாலின் கரையில் அமைந்துள்ள ஓரங்கட்டப்பட்ட குடிசைப் பகுதியாகும். இக்குடிசைப் பகுதியிலுள்ள 370 குடிசை வீடுகளில் பெரும்பாலானோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். டெல்லி உயர் நீதிமன்றம், ‘மதராசி கேம்ப்’ என்பது பராப்புல்லா வடிகாலின் கரையில் கட்டப்பட்ட அனுமதியில்லாத கட்டடம் / ஆக்கிரமிப்பு எனக் குறிப்பிட்டுள்ளது. இந்தக் குடியிருப்பினால், வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு, சுற்றியுள்ள பகுதிகளில் குறிப்பாக மழைக்காலத்தில் கடுமையான நீர் தேக்கம் ஏற்படுகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *