
சென்னையில் மின்சார பேருந்து சேவையை முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத வகையில், மின்சார பேருந்துகளை இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மின்சார பேருந்துகளை இயக்கும் வகையில் டெண்டர் வெளியிடப்பட்டு, கொள்முதல் செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.