• May 30, 2025
  • NewsEditor
  • 0

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரரான ரவீந்திர ஜடேஜா, அதே அணியைச் சேர்ந்த தமிழக வீரரான அஷ்வினின் யூடியூப் சேனலுக்குப் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார்.

அந்தப் பேட்டியில் தோனியுடனான தனது முதல் சந்திப்பு குறித்துப் பகிர்ந்திருக்கிறார்.

“நான் முதன் முதலில் தோனியை சென்னையில் நடந்த 2005 சேலஞ்சர்ஸ் டிராபி தொடரில்தான் சந்தித்தேன். நான் மும்பையிலிருந்து வந்து கொண்டிருந்தேன்.

ஜடேஜா – தோனி

நாங்கள் இருவரும் ஒரே விமானத்தில்தான் இருந்தோம். நான் எக்கனாமி பிரிவில் அமர்ந்திருந்தேன். தோனி பிசினஸ் பிரிவில் அமர்ந்திருந்தார்.

எல்லோரும் அப்போது ‘தோனி நமக்கு முன்தான் அமர்ந்து இருக்கிறார்’ என்று சொன்னார்கள்.

எனக்கு அவரைப் பார்ப்பதற்குத் தயக்கமாக இருந்தது. இப்போதும் நான் அவரைப் பார்ப்பதற்குத் தயங்குவேன்.

ஏனெனில், அவர் நல்ல மனநிலையில் இல்லை என்றால் என்ன செய்வது என்று யோசிப்பேன்.

அவர் நல்ல மனநிலையில் இல்லை என்றால், அது குறித்து வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார். ஆனால் அது அவர் முகத்தில் தெரியும்.

அப்போது நான் சிறுவனாக இருந்தேன். எனவே அப்போது தோனி போன்ற ஒருவரை எப்படி எதிர்கொள்வது என்ற தயக்கம் எனக்கு இருந்தது.

நான் முதல் முறை அவரை விமானத்தில் பார்த்தபோது அவருக்கு நீளமான முடி இருந்தது.

ஜடேஜா - தோனி
ஜடேஜா – தோனி

எங்கள் மேலாளர் தோனியுடன் நாம் ஒன்றாகத்தான் ஹோட்டலுக்குச் செல்லப் போகிறோம் என்றார்.

நான் எப்படி அவருடன் ஒன்றாகச் செல்வது என்று தயங்கிக் கொண்டிருந்தேன். அதிர்ஷ்டவசமாக தோனியின் மொபைல் போன் கீழே விழுந்துவிட்டது.

அதனால் அவர் சிறிது நேரம் காத்திருக்க வேண்டி வந்தது. நான் இந்த விஷயத்தை வைத்து ‘இங்கிருந்து நாம் வெளியே சென்று விடலாம்’ என்று நினைத்தேன்.

அப்போது தோனி இந்திய அணிக்காக ஆடுபவர், அவரிடம் நாம் என்ன பேசுவது என நினைப்பேன்” என்று இவ்வாறு ரவீந்திர ஜடேஜா தோனியுடனான முதல் சந்திப்பு குறித்துப் பகிர்ந்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *