
சென்னை: மார்க்சிசம் – லெனினிசக் கொள்கை மீது பற்றுக் கொண்டவர் மறைந்த நடிகர் ராஜேஷ், அந்த கொள்கை வலுப்பெற வேண்டும் என அக்கறை காட்டிய செயல்பாட்டாளர் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்: "தமிழ் திரையுலகில் தனி முகமாக விளங்கிய நடிகர் ராஜேஷ் (75) இன்று (29.05.2025) காலமானார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஒன்றுபட்ட தஞ்சாவூர் மாவட்டத்தின் அணைக்காட்டை பூர்வீகமாக கொண்ட வில்லியம் – வில்லி கிரேஸ் தம்பதியர் மன்னார்குடியில் வாழ்ந்த போது 1949ம் ஆண்டு டிசம்பர் 20ம் தேதி பிறந்தவர் ராஜேஷ்.