• May 28, 2025
  • NewsEditor
  • 0

ஆஸ்திரேலிய நடிகை, திரைப்படத் தயாரிப்பாளர் எனப் பல்வேறு துறைகளில் இயங்குபவர் கிளேர் மெக்கான் (Clare McCann) . இவருக்கு 13 வயதில் அட்ரேயு என்ற மகன் இருந்தார். இவர் பள்ளிக்குச் சென்று வந்துகொண்டிருந்த நிலையில், கடந்த 28-ம் தேதி அட்ரேயு தற்கொலை செய்துகொண்டார். இந்த தற்கொலைக்கு காரணம், பள்ளியில் அவருக்கு நடந்த அவமானகரமான சில சம்பவங்கள்தான் எனக் கூறப்படுகிறது. அது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.

Clare McCann

இதற்கிடையில், நடிகை கிளேர் மெக்கான் தன் மகனின் உடலை கிரையோஜெனிக் முறையில் பாதுகாக்க முடிவு செய்திருக்கிறார். அதற்காக ஒரு வாரத்துக்குள் AUD 300,000 (ரூ. 1,65,16,860) திரட்ட தீவிரமாக முயன்று வருகிறார். இது தொடர்பாக அவர் GoFundMe பக்கத்தில் “என் 13 வயது மகன், நியூ சவுத் வேல்ஸ் பள்ளியில் பல மாதங்களாக நடந்த கொடுமைக்காக, தற்கொலை செய்து கொண்டார். சுமார் ஆறு அல்லது ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, நாங்கள் மறுவாழ்வு மற்றும் சொர்க்கம் பற்றி பேச ஆரம்பித்தோம்.

நான் அவரிடம் கிரையோஜெனிக்ஸ் பற்றி கொஞ்சம் பேசினேன். அதை அவர் செய்ய விரும்புவதாக என்னிடம் கூறினார். அவர் விரும்பிய வாழ்க்கையை வாழ அவருக்கு இரண்டாவது வாய்ப்பு தேவை. அடுத்த 7 நாள்களுக்குள் அவரின் உடலை கிரையோஜெனிக் முறையில் பாதுகாக்க நான் $300,000 திரட்டுகிறேன். இந்தத் தொகை கிடைக்கவில்லை என்றால் அவர் மீண்டும் உயிர்வாழும் வாய்ப்பு இல்லாமலே போய்விடும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

cryogenically
cryogenically

கிரையோப்ரிசர்வேஷன் என்றால் என்ன?

கிரையோப்ரிசர்வேஷன் என்பது செல்கள், திசுக்கள், உறுப்புகள் உள்ளிட்ட முழு உடலையும் மிகக் குறைந்த வெப்பநிலைக்கு, அதாவது -130 டிகிரி செல்சியஸுக்குக் கீழே குளிர்விப்பதன் மூலம் பாதுகாக்கும் செயல்முறையாகும். இதற்காக பெரும்பாலும் திரவ நைட்ரஜனை (-196 டிகிரி செல்சியஸ்) பயன்படுத்துகிறது. இந்த வெப்பநிலையில், வளர்சிதை மாற்ற செயல்பாடுகள் நிறுத்தப்படுகிறது. அதனால் அந்த உடல் நீண்ட காலத்துக்கு கெடாமல் இருக்கும். இதன் மூலம் உறைய வைக்கப்படுபவை மனித இனப்பெருக்கத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

ஆஸ்திரேலியாவின் முதல் கிரையோனிக்ஸ் நிறுவனம் சதர்ன் கிரையோனிக்ஸ் கடந்த ஆண்டு ஹோல்ப்ரூக்கில் திறக்கப்பட்டது. சிட்னி மருத்துவமனையில் இறந்த 80 வயதுடைய ஒருவருக்கு முதல் கிரையோபிரெசர்வேஷன் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *