
பெங்களூரு: கன்னட மொழிக்கு மிக நீண்ட வரலாறு உண்டு. நடிகர் கமல்ஹாசனுக்கு அது தெரியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
சென்னையில் அண்மையில் நடைபெற்ற 'தக் லைஃப்' திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், 'தமிழ் மொழியில் இருந்து கன்னடம் பிறந்தது' என்று கூறி இருந்தார்.