
புதுடெல்லி: மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்பாக ஆபரேஷன் சிந்தூர் குறித்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. மழைக்கால கூட்டத்தொடர் வழக்கமாக ஜுலை மாதத்தில் நடைபெறும்.
இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை துணைத் தலைவர் சகாிகா கோஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, “பஹல்காம் தாக்குதலுக்கு பின்பும், ஆபரேஷன் சிந்தூரின் போதும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி அரசுக்கு ஆதரவாக நின்றது. பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க அனுப்பப்பட்டிருக்கும் தூதுக்குழுக்களையும் ஆதரித்தது. அரசுக்கு எங்களின் முழு ஆதரவினை வழங்கியிருக்கிறோம் என்று நாங்கள் நம்புகிறோம்.