• May 28, 2025
  • NewsEditor
  • 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

வருகிறவர்களை வாருங்கள் என்று சொல்வதுதானே வழக்கம். இப்ராஹிம் பாயை வர வேண்டாம் என்று சொல்வதற்கு காரணம் இருக்கிறது. அது எனக்கு மட்டுமில்லை, காதர் பாய்க்கும், சுல்தான் பாயுக்கும், இம்ரான் பாய்க்கும், தம்பி சுந்தரத்திற்கும் தெரியும்.

வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடந்த ஐந்து நாட்களாக மழை; மக்கள் பாலுக்கும், பன்னுக்கும் ஏங்கி தவித்த நேரத்தில் தான் சுல்தான் பாய்; இந்த வார்த்தையை சொன்னார். “உன் நிலத்தில் உனக்கென விடப்பட்ட கடமையை முடிக்காமல் என் நிலத்திற்கு வராதே… (ஹஜ் பயணம்)என்று அல்லாஹ் ” சொன்னாதாக . அதனால் இன்று இந்த மக்களுக்கு உணவளிப்பத்துதான் தமது கடமை என்றார்.

chennai rain

பள்ளிவாசல் உள்ளே சென்ற சுல்தான் பாயின் பின்னே நாங்கள் ஐவரும் சென்றோம். எல்லோருக்கும் ஆளுக்கொரு வேலையை பிரித்து தந்தார். எனக்கு சில மளிகைப்பொருளும் தக்காளியும் வாங்கி வரச் சென்னார். நான் தம்பி சுந்தரத்தையும் துணைக்கு அழைத்துக் கொண்டேன். பள்ளிவாசலில் நோம்பு கஞ்சி டவராவில் தக்காளி சாதம் செய்து மக்களுக்கு தந்து விடுவோம் என்பது தான் அவரின் எண்ணம் என்பதை நாங்களே புரிந்து கொண்டோம்.

மேட்டு நகர் பகுதியில் ஒரு சில இடங்களில் தண்ணீர் முழங்கால் வரையில் தான் இருந்தது. அதிலும் சில கடையில் தண்ணீர் புகுந்து விளையாடியது. நாங்கள் திரும்பி வரும்போது சுந்தரம் கால்சட்டை முழுதும் நனைந்து விட்டது. இப்ராஹிம் பாய் பனியனோடு நின்றுக் கொண்டிருந்தார். அடுத்த ஒரு மணி நேரத்தில் தக்காளி சாதம் ரெடியாகி விடும் என்பது தெரியும்.அதற்குள் நானும் சுந்தரமும் மீண்டும் நகர் பகுதிக்கு சென்று விட்டோம்.

துப்புரவுப்பணியாட்கள் ஆங்கங்கே இருந்த குப்பைகளையும் சாக்கடையில் தேங்கியிருந்த நெகிழி குவியல்களையும் எடுத்துக் கொண்டிருந்தார்கள். கூடவே தன்னார்வலர்களும் அதிகாரிகளும் இருந்தார்கள். 

மேட்டு பகுதியை போல இந்த பகுதி இல்லை; எல்லாம் ஓட்டு வீடுகளும் தகர கொட்டகையும் தான் இருந்த பகுதி, இரண்டு நாட்களுக்கு முன்; எல்லாம் மூழ்கிய நிலையில் இருந்தன. மக்கள் அங்கும் இங்கும் பிரிந்து. உயிர் பிழைத்தனர். ரயில் நிலைய மேல் நடைபாதை, நான்கு வழிச்சாலையின் பாலம், இன்னும் மேட்டு பகுதியென தங்கி இருந்தார்கள். இந்த ரயில் மேல் நடைபாதையில் தங்கியிருப்பவர்களுக்கு உணவு அளிப்பது தான் சுல்தான் பாய் திட்டம்.

எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நாங்கள் அப்படியே திரும்பி வந்து கொண்டிருந்தோம் அப்பொழுதுதான் இப்ராஹிம் பாய் என்னிடம் வைத்திரு பிறகு வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்னநோக்கியா 1100 செல்போனில் இருந்து மணி ஒலித்துக் கொண்டிருந்தது.நான் அதை அட்டென்ட் செய்து பேசுவதற்குள் மணி ஒழிப்பது நின்றுவிட்டது.

சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்த மணி ஒலித்தது அப்போது நான் பள்ளிவாசலை நெருங்கி விட்டேன் வேக வேகமாக ஓடி சென்று இப்ராஹிம் பாயிடம் பாய் போன் வருது அட்டென்ட் பண்ணி பேசுங்க என்றேன் அப்போது பாய் தக்காளி சாதங்களை பொட்டணங்கள் போட்டுக் கொண்டிருந்தார்.

ஹலோ சொல்லுமா ஐயையோ அப்படியா சரி மா நான் வந்துடறேன் என்று போனை பாய் துடித்தார்

சுல்தான் பாய் இப்ராஹிம் பாயிடம் யாரு என்று கேட்டார் மகள் என்று மட்டும் சொல்லி வேறு எந்த பதிலும் சொல்லாத இப்ராஹிம் பாய் வேலையை கவனித்துக் கொண்டிருந்தார். தக்காளி சாதம் பொட்டணங்களை எல்லாம் நெகிழிப் பைகளில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார்.

ஆளுக்கு ஒரு நெகிழிப் பைகளை தோள்களில் சுமந்து கொண்டு அந்த ரயில் நிலைய மேல் நடை பாதையில் இருப்பவர்களுக்கு கொடுப்பதற்கு சென்று கொண்டிருந்தோம்.அப்பொழுது மீண்டும் இப்ராஹிம் பாயின் செல்போன் அடித்துக் கொண்டிருந்தது.அவர் அந்த நெகிழி பையின் சுமையில் செல்போனை அட்டென்ட் செய்து பேச இயலாத நிலையாக இருந்தது.

சுந்தரம் தான் ; அவர் ஜேப்பில் கையை விட்டு

“ஹலோ யார் பேசறது ” …… .

“அப்படியா இந்தா தரேன் பேசுங்கோ” என்று சுந்தரம் பாயின் காதோரத்தில் செல்போனை வைத்தான். “அம்மா நான் வாரேன் மா கொஞ்சம் பொறுமா வந்துடறேன்”.என்று பாய் சொல்லி முடிப்பதற்குள் கோபத்தில் மகள் சகிலா பானு போனை துண்டித்து விட்டாள்.

அவளுக்கு அத்தனை கோபம் வருவதற்கு வேறொன்றும் காரணம் இல்லை அவளின் இரண்டு வயது மகன் தீராத காய்ச்சலால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறான்.தனியார் மருத்துவமனைகளில் சென்று செலவழித்தும் பார்த்தும் சரியாகவில்லை இப்போது அரசு மருத்துவமனைக்கு செல்ல தயாராக இருக்கிறாள்.

இப்ராஹிம் பாய் பலமுறை சொன்னார். அரசு மருத்துவமனைக்கு சென்றால் பேரனுக்கு சரியாகிவிடும் பானுநான் சொல்வதைக் கேள் என்று பலமுறை சொல்லியும் கேட்கவில்லை அதன் பொருட்டு தான் அவர் போகாமல் தவிர்ப்பது போல் எங்களுக்கு தெரிந்தது. இதற்காகத்தான் நாங்கள் எல்லோருமே அவரை வரவேண்டாம் நீங்கள் இருங்கள் பாய் என்று சொன்னோம் ஆனால் அவர் அதையும் மீறி எங்கள் பேச்சைக் கேட்காமல் வந்து இங்கு பணிவிடை செய்து கொண்டிருக்கிறார்.

ஒரே மக(ன்)ள் என்ற காரணத்தினால் அதிக பாசத்தை கொட்டி வளர்த்த சில பெற்றோர்களின் நிலை இப்படியாகத்தான் இருக்கிறது.

வானம் கார்முகிலை திட்டு திட்டாக பிரித்துத் தள்ளியது. அரக்கன் வாய்த்திறந்து அண்டத்தின் மொத்தக்காற்றையும் கக்கிக் கொண்டிருப்பது போல் தெரிந்தது. எங்களின் நடையில் மாற்றம் பெற்று இருப்பதை ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம் சுந்தரம் ஈடுகொடுக்க முடியாமல் திணறினான். ரயில் நிலைய மேல் நடைபாதையில் இருப்பவர்கள் சிலர் எங்களைப் பார்த்து கைநீட்டி பேசுவதை நான் கவனித்தேன் அதில் சிலர் முன்டி அடித்துக் கொண்டு கீழ் இறங்கினார்கள்.

அவசரப் படாதீர்கள் நாங்களே மேலே வருகிறோம் என்று பெருத்த குரலெடுத்து கத்தினார் சுல்தான் பாய்.

“எல்லாரும் உட்காருங்க எதுக்கு முட்டிக்கிட்டு மோதிக்கிட்டு கிடக்குறீங்க சாப்பாடு எல்லாத்துக்கும் இருக்குது கவலைப்படாதீங்க உங்களுக்காகத்தான் நாங்க செஞ்சு கொண்டு வந்திருக்கிறோம்”,

நடைபாதையின் இரு பக்கமும் வரிசை கட்டி அமர்ந்தார்கள் அவர்கள் அமரும் நிகழ்வு என்பது நொடி பொழுதில் நடந்து முடிந்தது ஆளுக்கு ஒரு பொட்டணங்களை வழங்கிக் கொண்டிருக்கும் பொழுது தான் 108 சத்தம் கேட்க துவங்கியது.

எந்த திசையில் இருந்து எந்த திசைக்கு போகிறது என்று அவர்களால் யூகிக்க முடியவில்லை கொஞ்சம் தூரத்தில் கேட்டதால்,எல்லோருக்கும் அந்த சந்தேகம் எது எப்படி இருந்தாலும் நல்லபடியாக உள்ளே இருப்பவர்கள் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று தான் மனதிற்குள் அல்லாஹுவை வேண்டிக் கொண்டார்.

பசியின் பிடியில் கிடந்தவர்கள் பொட்டணங்களை பிரித்து வேகமாக அள்ளி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.அதில் சிலர் பிறகு சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று அவர்கள் வைத்திருந்த பையில் வைத்துக் கொண்டார்கள்.சாப்பிட்டவர்களிடம்பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்த இப்ராஹிம் பாயின் செல்போன் மீண்டும் ஒலித்தது அதை எடுத்து பேசுவதற்கு தயாரானார்.

“உங்க பேரனுக்கு ரொம்ப முடியல நீங்களும் வர்ற மாதிரி தெரியல அதனால நான் 108க்கு போன் போட்டு பிள்ளையை தூக்கி கிட்டு GH போயிட்டு இருக்கேன்”.

பதில் வார்த்தையை கேட்கும் முன் துண்டித்து விட்டாள்

எங்களிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டு கிளம்ப தயாரானார்.

“ஒன்றும் கவலைப்படாதீங்க பாய் குழந்தைக்கு சரியாகிவிடும்” என்று ஆறுதல் வார்த்தையை வீசினார் சுல்தான் பாய்

அதற்கு அவரின் பதில் இதுவாக இருந்தது

நான் என் கடமையை செய்து விட்டேன் அது அல்லாவின் கடமை அவர் நிச்சயம் நீங்கள் சொன்னது போல குழந்தைக்கு பூரண குணமடைய செய்வார்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *