
புதுச்சேரி: புதுச்சேரியில் மதுபான விலை உயர்ந்தது. புதிய விலை இன்று முதல் அமலுக்கு வந்தது. பீருக்கு ரூ.10 வரையிலும், குவார்ட்டர் மதுப்பாட்டில் ரூ.6 முதல் ரூ.30 வரையும் விலை உயர்ந்துள்ளது.
புதுவையில் கடந்த மார்ச்சில் நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இந்த நலத் திட்டங்களை செயல்படுத்த அரசுக்கு கூடுதலாக சுமார் ரூ.500 கோடி தேவைப்படுகிறது. ஆனால் இதற்கான நிதி அரசிடம் இல்லை. அதனால் அரசின் வருவாயை பெருக்க வேண்டிய கட்டாய சூழல் எழுந்துள்ளது.