
சென்னை: மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் பழனிசாமி கையெழுத்திட்ட படிவங்களை ஏற்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்தில் வா.புகழேந்தி, சூரியமூர்த்தி ஆகியோர் மனு அளித்துள்ளனர்.
தமிழகத்தில் விரைவில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 2 இடங்களுக்கு அதிமுக சார்பில் வேட்பாளர்களை நிறுத்த கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி திட்டமிட்டுள்ளார். ஏற்கெனவே பழனிசாமி பொதுச்செயலாளரானது, அவர் பல்வேறு தேர்தல்களில் இரட்டை இலை சின்னத்தை வேட்பாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யும் படிவங்களில் கையெழுத்திட்டு வருவது தொடர்பாக வா.புகவேந்தி மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.