
கோவை: நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை தொடர்வதால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 4 நாட்களில் சிறுவாணியின் நீர்மட்டம் 13.72 அடி உயர்ந்துள்ளது.
கோவையின் முக்கிய நீராதாரங்களில் ஒன்று சிறுவாணி அணை. கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. சிறுவாணி அணையில் இருந்து தினமும் குடிநீர் தேவைக்கு நீர் எடுக்கப்பட்டு, பகிர்மானக் குழாய்கள் வழியாக சாடிவயலில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு சுத்திகரிப்பு செய்யப்பட்ட நீர் பின்னர், கோவை மாநகராட்சியின் 30 வார்டுகளுக்கும், வழியோரம் உள்ள 22-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் விநியோகிக்கப்படுகிறது. சிறுவாணி அணையின் நீர்தேக்க அளவு 49.53 அடியாகும்.