
‘சூர்யா 45’ படம் எப்போது வெளியீடு என்பது குறித்து பேசியிருக்கிறார் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிக்க புதிய படம் ஒன்று தயாரிப்பில் இருக்கிறது. இதன் தலைப்பு, எப்போது வெளியீடு உள்ளிட்ட எந்தவொரு தகவலுமே வெளியாகாமல் உள்ளது. இதனை ட்ரீம் வாரியர் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.