• May 28, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி தீர்ப்பளித்துள்ளார். தண்டனை விவரம் ஜூன் 2-ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்துள்ளார்.

இந்த வழக்கில் ஞானசேகரன் மீது 11 பிரிவுகளின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டது. அத்தனை குற்றச்சாட்டுகளும் நிரூபணமானதாக அறிவித்த நீதிபதி, ஞானசேகரன் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கியுள்ளார். இந்த வழங்கில் 5 மாதங்களில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *