
அகமதாபாத்: இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்த உள்நாட்டு பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். குஜராத் தலைநகர் காந்தி நகரில் நேற்று நடைபெற்ற விழாவில் ரூ.5,536 கோடி மதிப்பிலான அரசு நலத் திட்டங்களை அவர் தொடங்கிவைத்தார்.
சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் அவர் பேசியதாவது: இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதி ஆக்கிரமிக்கப்பட்டது. அந்த பகுதியை மீட்க சர்தார் படேல் திட்டமிட்டார். ஆனால் அவரது திட்டம், அறிவுரை ஏற்கப்படவில்லை. இதன் காரணமாக கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக எல்லை தாண்டிய தீவிரவாத பிரச்சினையை எதிர்கொண்டு வருகிறோம்.