
தனது ஸ்பிரிட் படத்தில் நடிக்க, பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுடன் தெலுங்கு பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.
இதில் நடிக்கவும் ஆரம்பத்தில் ஒப்புக்கொண்டார். அதேசமயம் தீபிகா படுகோனே கர்ப்பமாக இருந்தார். இதனால் படப்பிடிப்பு தாமதமாகிக்கொண்டிருந்தது.
குழந்தை பெற்றுப் படப்பிடிப்புகளில் பங்கேற்க தீபிகா படுகோனே தயாரானபோது வேறு பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இப்படத்தில் நடிக்கத் தனது ரூ.20 கோடி கட்டணம் வேண்டும் என்றும், படத்தில் கிடைக்கும் லாபத்தில் தனக்குப் பங்கு வேண்டும் என்றும், தினமும் 8 மணி நேரம்தான் படப்பிடிப்பில் பங்கேற்பேன் என்றும் தீபிகா படுகோனே நிபந்தனைகளை அடுக்கிக்கொண்டே சென்றார்.
அதுவும் தனது ஏஜெண்ட் மூலம் இந்த பேச்சுவார்த்தையை நடத்தினார். மேலும் படப்பிடிப்பு 100 நாட்களுக்கும் அதிகமாகச் சென்றால் சொன்ன கட்டணத்தை விடக் கூடுதலாகக் கொடுக்கவேண்டும் என்றும், ஒவ்வொரு நாளுக்கும் தனித்தனியாகக் கட்டணம் கொடுக்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.
அவரது நிபந்தனைகளைக் கேட்ட இயக்குநர் சந்தீப் ரெட்டி அதிர்ச்சியாகிவிட்டார். தீபிகா படுகோனேவிற்கு இப்போதுதான் குழந்தை பிறந்திருக்கிறது. எனவே குழந்தையைக் கவனிக்க ஏதுவாக 8 மணி நேரம்தான் நடிப்பேன் என்று நிபந்தனை விதித்தார்.
இப்படத்தில் நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். படப்பிடிப்பைத் தொடங்குவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் தீபிகா படுகோனே ஏற்றுக்கொள்ள முடியாத நிபந்தனைகளை விதித்ததால் அவருக்குப் பதில் புதிய நடிகையைத் தயாரிப்பாளர் தரப்பு தேட ஆரம்பித்தது.
இதில் இந்தியில் வெளியான அனிமல் படத்தில் நடித்த டிரிப்டி டிம்ரியிடம் இயக்குநர் சந்தீப் ரெட்டி பேச்சுவார்த்தை நடத்தினார்.
இப்பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்துள்ளது. கோடிகளில் சம்பளமே வாங்காத நடிகை டிரிப்டி டிம்ரிக்கு 6 கோடி சம்பளம் கொடுப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள்.

உடனே வந்த அதிர்ஷ்டத்தை விட்டுவிடக்கூடாது என்று எண்ணி டிரிப்டி டிம்ரி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டார்.
தீபிகா படுகோனே இவ்விவகாரத்தில் பிடிவாதமாக இருந்தது குறித்து இயக்குநர் சந்தீப் ரெட்டி நேற்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் தீபிகா படுகோனேயைச் சாடி ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.
பிரச்னைக்குச் சுமுக தீர்வு காண மேற்கொண்ட முயற்சியில் தீபிகா படுகோனே பிடிவாதமாக இருந்ததாக இயக்குநர் சந்தீப் ரெட்டி குற்றம் சாட்டி இருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…