
புதுடெல்லி: தென்மேற்கு டெல்லி பகுதியில் சட்டவிரோதமாக வசித்து வந்த 92 வங்கதேச நாட்டவரை போலீஸார் கைது செய்துள்ளனர். டெல்லியின் பல்வேறு பகுதிகளில் வங்கதேச நாட்டைச் சேர்ந்த பலர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக புகார்கள் வந்தன.
இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் முதல் போலீஸார் விசாரணை நடத்தி சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வங்கதேச நாட்டைச் சேர்ந்த நபர்களை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் சட்டவிரோதமாத தங்கியிருக்கும் வங்கதேச மக்களை கைது செய்வதற்காக, போலீஸார் 10 நாட்கள் சிறப்பு தேடுதல் வேட்டையை அண்மையில் தொடங்கினர்.