
‘கோல்டன் டோம்’ – அமெரிக்காவை பாதுகாக்க 175 பில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்படும் புதிய ராணுவக் கட்டமைப்பு இது. இதற்கான ஒப்புதலை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வழங்கியுள்ளார்.
இந்த கோல்டன் டோம் கப்பல் ஏவுகணைகள், பாலிஸ்டிக் ஏவுகணைகள், ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள், டிரோன்கள் என எந்த ஏவுகணையாக இருந்தாலும், அதுவும் அவை சாதாரணமானது அல்லது அணு ஆயுதம் என எதுவாக இருந்தாலும் தோற்கடிக்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கும் இந்தக் கட்டமைப்பு. மேலும், அமெரிக்காவை விண்வெளியில் இருந்து தாக்கினால் கூட இந்தக் கட்டமைப்பு தடுத்துவிடும் ஆற்றலைக் கொண்டது.
இந்தக் கட்டமைப்பில் தாங்களும் இணைந்துகொள்ள கனடா விருப்பம் தெரிவித்துள்ளதாக ட்ரம்ப் முன்னர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நேற்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் ட்ரம்ப் பதிவிட்டுள்ளதாவது…
“பிரமாண்டமான கோல்டன் டோம் கட்டமைப்பு உருவாக்கத்தில் பங்குகொள்ள கனடா விருப்பம் தெரிவித்துள்ளது. இதில் அவர்கள் சேர 61 பில்லியன் டாலர்களை தர வேண்டியதாக இருக்கும். ஆனால், அவர்கள் அமெரிக்காவின் 51-வது மாநிலமாக இணைந்தால், அவர்கள் எந்த டாலரையும் தர வேண்டாம். அவர்கள் இந்த ஆஃபர் குறித்து யோசித்து வருகிறார்கள்”.
அமெரிக்கா உடன் இணையமாட்டோம் என்று கனடா மிக உறுதியாக இருந்து வருகிறது. இந்த நிலையில், ட்ரம்பின் இந்தப் பதிவு பரபரப்பை கிளப்பியுள்ளது.
( @realDonaldTrump – Truth Social Post )
( Donald J. Trump – May 27, 2025, 5:41 PM ET )I told Canada, which very much wants to be part of our fabulous Golden Dome System, that it will cost $61 Billion Dollars if they remain a separate, but unequal, Nation, but will cost ZERO… pic.twitter.com/iKSSYkRVzz
— Donald J. Trump TRUTH POSTS (@TruthTrumpPosts) May 27, 2025