
தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது.
இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யலாம் என்று தென் மண்டல இந்திய வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் தகவல் இதோ…
கோவை மற்றும் நீலகிரியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
இது இன்று காலை 10 மணி வரையிலான கணிப்பு ஆகும்.
தொடர்ந்து மழை பெய்து வருவதால், சில இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கலாம். அதனால், அந்த மாதிரியான பகுதிகளில் மிகவும் ஜாக்கிரதையாகப் பயணிக்க வேண்டும்.
இந்த மாவட்டங்களில் வெளியில் செல்லும்போது முடிந்தளவிற்கு ரெயின் கோட், குடை போன்றவற்றை கொண்டு செல்வது நல்லது.
மழை அல்லது மழைநீர் தேங்கி நிற்கும் இடங்களில் குழந்தைகளை விளையாட அனுமதிக்கும்போது பெற்றோர்கள் கண்காணித்துக் கொண்டே இருப்பது நல்லது.