
மதுரை: ஜூன் 22-ல் மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் அறுபடை வீடுகளின் மாதிரியை அமைத்து, 5 லட்சம் பக்தர்களைத் திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை சுற்றுச் சாலையில் உள்ள அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் வரும் ஜூன் 22-ம் தேதி நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கான பூமி பூஜை விழா இன்று நடைபெறுகிறது. இதில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.