• May 28, 2025
  • NewsEditor
  • 0

‘என்னுடைய நண்பர் தான்… நான் பேசுகிறேன்’, ‘போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு உதவுகிறேன்’, ‘நான் இல்லாமல் புதின் எப்படி வருவார்?’ என்று தன் நண்பரான ரஷ்ய அதிபர் புதினை விட்டுக்கொடுக்காமல் பேசி வந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

ஆனால், ரஷ்யா எப்போதெல்லாம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்துகிறதோ, அதற்கு கண்டனம் தெரிவிக்கவும் ட்ரம்ப் தயங்கவில்லை.

தற்போது ரஷ்யா உக்ரைனின் வட கிழக்கு பகுதியில் உள்ள நான்கு கிராமங்களை கைப்பற்றி உள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் ட்ரம்ப், “நான் இல்லையென்றால், ரஷ்யாவிற்கு ஏற்கெனவே நிறைய கெட்ட விஷயங்கள் நடந்திருக்கும் என்பதை புதின் உணரவில்லை. கெட்ட விஷயம் என்றால் மிகவும் கெட்ட விஷயம். புதின் நெருப்போடு விளையாடுகிறார்” என்று கோபமாகப் பதிவிட்டுள்ளார்.

Donald Trump – டொனால்டு ட்ரம்ப்

இதற்கு பதிலளிக்கும் விதமாக, ரஷ்ய பாதுகாப்பு அதிகாரி டிமிட்ரி மெட்வெடேவ், “நெருப்போடு விளையாடுகிறார் மற்றும் மிகவும் மோசமான விஷயம் என்று ரஷ்யாவைக் குறித்த ட்ரம்ப் உடைய வார்த்தைகளை பொறுத்தவரை… எனக்கு தெரிந்த ஒரே மிகவும் மோசமான விஷயம் – மூன்றாம் உலகப் போர். இது ட்ரம்பிற்கு புரியும் என்று நினைக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

ட்ரம்பின் சமூக வலைதளப் பதிவுகளுக்கு ரஷ்யா இதுவரை பெரிதாக எதுவும் ரியாக்ட் செய்யமாட்டார்கள். ஆனால், தற்போது ரஷ்யாவின் டாப் பாதுகாப்பு அதிகாரி மூன்றாம் உலகப் போர் குறித்து பதிவிட்டிருப்பது சர்ச்சையைக் கிளப்புகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *