
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரான் – பிரிஜிட்டே மாக்ரான் தம்பதி மீண்டும் பேசுபொருளாக உருவெடுத்துள்ளனர்.
வியட்நாம் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் மாக்ரான், நொய் பாய் சர்வதேச விமான நிலையம் விமான நிலையத்தில் தரையிறங்கும் நேரத்தில் அதிபரின் முகத்தில் அவரது மனைவி கைவைக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.
சிலர் பிரிஜிட்டே இம்மானுவேலை அறைந்ததாகக் கருதுகின்றனர்.
இம்மானுவேல் – பிரிஜிட்டே தம்பதி செய்திகளில் இடம்பெறுவது, இது முதன்முறை அல்ல. அவர்களது சுவாரஸ்யமான கதையைத் தெரிந்துகொள்வோம்.
வடக்கு பிரான்ஸில் உள்ள அமியன்ஸ் பகுதியில் இருக்கும் தனியார் கத்தோலிக்க பள்ளியில் 1993-ம் ஆண்டு மேக்ரான் தம்பதியினர் முதன்முதலாக சந்தித்துக்கொண்டுள்ளனர்.
அங்கு ஆசிரியராக இருந்த பிரிஜிட்டேவின் வயது அப்போது 39, இம்மானுவேலோ 15 வயதேயான மாணவர்.
பிரிஜிட்டே அப்போது ஆன்றே-லூயிஸ் ஆசிரே என்ற வங்கிப் பணியாளரின் மனைவி. அவர்களுக்கு 3 குழந்தைகள் இருந்தனர். பிரிஜிட்டேவின் மூத்த மகள் மேக்ரானின் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தார்.
மேல்லே பர்ன் என்ற எழுத்தாளர், பிரிஜிட்டேவின் வாழ்க்கை வரலாற்றை “மக்ரோன்: ஒரு கட்டுப்பாடற்ற பெண் (Brigitte Macron: An Unfettered Woman)” என்ற புத்தகமாக எழுதியுள்ளார்.
அதன்படி, 1994 கோடை காலத்தில் பிரிஜிட்டே மற்றும் மேக்ரான் ஒன்றாக சூரிய குளியலில் ஈடுபட்டிருப்பதைப் பார்த்து இருவருக்கும் இருந்த உறவை குடும்பத்தினர் கண்டறிந்துள்ளனர். பின்னர் ஆசிரேவுக்கும் பிரிஜிட்டேவுக்கும் விவாகரத்து நடந்தது.
இம்மானுவேலின் முன்னாள் விளையாட்டு ஆசிரியர் டேனியல் லெலூ, “இம்மானுவேல் 15 வயதிலேயே 25 வயது நபருக்கான முதிர்ச்சியுடன் இருந்தார், அவரது வகுப்பு தோழர்களை விட ஆசிரியர்களுடன் நேரம் செலவிடுவதையே விரும்பினார்.” எனக் கூறியிருக்கிறார்.

இம்மானுவேல் – பிரிஜிட்டே காதல் சுற்றியிருந்த யாவருக்கும் வெறுப்பையே அளித்தது. சிலர் பிரிஜிட்டேவின் வீட்டுக்கு பெயர் குறிப்பிடாத மோசமான கடிதங்களை அனுப்பியிருக்கின்றனர். சிலர் அவர் வீட்டுக்கதவில் எச்சில் துப்பியதாகவும் மேல்லே பர்ன் குறிப்பிட்டுள்ளார்.
பிரிஜிட்டேவின் நண்பர்கள் அவரை ஒதுக்கியிருக்கின்றனர்.
அந்த நேரத்தில் பல்கலைக்கழக படிப்பை முடிப்பதற்காக சொந்த ஊரைவிட்டு வெளியேறியிருக்கிறார் இம்மானுவேல். இந்த காலகட்டம் குறித்து பின்னர் பேசுகையில், “எங்கள் உறவு நிலைத்திருக்கும் என நான் நினைக்கவில்லை. இம்மானுவேல் அவர் வயதுக்கு ஏற்ற யாருடனோ காதலில் விழுவார் என்றே எண்ணினேன்” எனக் கூறியுள்ளார் பிரிஜிட்டே.
எவ்வளவு தூரத்தில் இருந்தாலும், இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டும், சந்தித்துக்கொண்டுமே இருந்துள்ளனர்.
1974ம் ஆண்டு பிரிஜிட்டேவுக்கு முதல் திருமணம் நடைபெற்றது. நீண்டநாள் இழுத்தடிக்கப்பட்ட அவர்களது விவாகரத்து 2007ம் ஆண்டு இறுதிசெய்யப்பட்டது. அதே ஆண்டில் பிரிஜிட்டேவை மணந்தார் இம்மானுவேல்.
2014ம் ஆண்டு இம்மானுவேல் பிரான்ஸின் பொருளாதார அமைச்சராக பொறுப்பேற்றபோது, அவரது மனைவி வேலையை விட்டு அவருக்கு ஆதரவாக இருக்கத் தொடங்கினார்.
இம்மானுவேலின் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தின் போது அவர்களது உறவைப் பற்றிய பேச்சு மிகுந்திருந்தது.

அந்த நேரத்தில், இம்மானுவேல் ரேடியோ பிரான்சின் தலைவருடன் ரகசியமாக உறவில் இருந்ததாகவும், பிரிஜிட் அதற்கு ஒரு மறைப்பாக மட்டுமே இருந்ததாகவும் வதந்திகள் வந்தன. இம்மானுவேல் அவற்றை முற்றிலுமாக மறுத்தார்.
வயதில் இளைவருடன் உறவில் இருந்தால் பிரிஜிட்டே பல வசைகளை எதிர்கொண்டுள்ளார். அவற்றுடன் வதந்திகளும் அவரை மிகுந்த காயப்படுத்தியதாக வாழ்க்கை வரலாற்றில் பர்ன் எழுதியுள்ளார்.
இப்போது வைரலாகியிருக்கும் வீடியோவுக்கு அதிபர் மேக்ரான் விளக்கம் அளித்துள்ளார். “நாங்கள் முட்டாள்தனமாக விளையாடிக்கொண்டிருந்தோம், அதை எதோ உலகமே அழிந்துவிடும் விஷயமாக மாற்றிவிட்டனர். எல்லோரும் அமைதியாக இருங்கள்” எனக் கூறியுள்ளார்.
I genuinely feel bad for Emmanuel Macron. Brigitte is a pedophile who groomed and abused him when he was just a child! I’m not saying he’s a good person but he clearly was and still is a victim and it’s very sad.
pic.twitter.com/a5nXTOJBZM— LIZ CROKIN (@LizCrokin) May 26, 2025