
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
எந்த கார் முதலில் வருகிறது என்று பார்த்தால் அது சாதாரண கார் ரேஸ். அதுவே நம்ப கார் எங்கே வருகிறது என்று பார்த்தால் அது தான் நம்ப AK கலந்து கொள்ளும் ரேஸ்.
சரி, நீங்க ஒரு கார் பந்தயத்தை எப்படி பார்ப்பீங்க?
யார் முதலில் வருவது, அந்த காரை ஓட்டுவது யார், எந்த டீம், எப்படி performance பண்ணுறாங்க, அப்படி தானே? அது தான் இல்ல.
ரேஸ்-ல இருபதுக்கும் மேற்பட்ட கார்கள் பங்கு பெற்றாலும், ஒரு குறிப்பிட்ட கார் எத்தனையாவதா வருது, எத்தனை வண்டியை முந்துகிறது, எப்ப எப்ப என்ன என்ன டிரைவர் மாறுறாங்க, அப்படின்னு பார்க்கிறதுக்கு தான் ஒரு பெரிய கூட்டமே காத்திருந்தது.
அதுமட்டும் இல்லை, அந்த ஒரு குறிப்பிட்ட வீரர் ஓட்டும் பொழுது ஒரே கும்மாளம் தான். அவரு பிரேக் எடுத்தால் ரேஸ் பார்ப்பதையே விட்டுட்டு அவரை பார்க்க pit ஸ்டாப் ஓடுவது எல்லாம் வேற லெவல்.
நான் எந்த ரேஸ் பத்தி பேசுறேன்னு இந்நேரம் புரிஞ்சிருக்குமே?
ஆமாம், இத்தாலியில் Misano circuit-ல் Ajithkumar racing கலந்துக்கொண்ட ரேஸ் பத்தி தான் பேசிட்டு இருக்கேன்.
மே 24, காலை ஒன்பது மணிக்கு மேல் துவங்கியது கார் ரேஸ். Fabian தான் முதலில் ஓட்டினார். சுமார் இரண்டு மணி நேரம் கடந்ததும் நம்ம அஜித் என்ட்ரி. அவர் சில மணிநேரம் ஓட்டிய பிறகு மீண்டும் Fabian. அவர்களது பிரிவில் துவக்கத்தில் மூன்றாம் இடத்தில் இருந்த நம்ம கார், பின் முன்னேறி முன்னேறி முதலாம் இடத்தில் சீறி பாய்ந்து கொண்டிருந்தது.
மதியம் வரையிலுமே நாங்கள் அனைவரும் கண்டிப்பாக இம்முறை முதல் இடம் தான் என்று மிகவும் சந்தோசமாக கொண்டாடி கொண்டிருந்தோம்,. ஆனால் துரதிஷ்டம் போல், பந்தயத்தின் சரிபாதி நேரத்தின் பொழுது, ஓர் பேரிடி விழுந்தது.
Fabian ஓட்டிக்கொண்டிருக்கும் பொழுது அவர்களது கார் gearbox பழுதடைந்ததால் சுமார் 45 நிமிடங்கள் அதை சரி பார்க்கும் வேளையில் கரைந்தது.

பொதுவாகவே ரேஸ்களும் விபத்துக்களும் பிரிக்க முடியாதவைகள். எனவே ஒவ்வொரு ரேஸ் டீம்மும் கைவசம் backup கார் முதல் அனைத்தும் தங்கள் வசம் வைத்திருப்பார்கள். ஆனால் சோதனையில் மேலும் ஒரு சோதனை, அன்று அவர்களிடம் spare gearbox இல்லை. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து கொண்டிருந்த பொழுது தான் Baskoeten racing டீம், அவர்களிடம் இருந்த gearbox கொடுத்து உதவினார்கள்.
ஆம், சென்ற மார்ச் மாதம் இத்தாலியில் நடைபெற்ற கார் பந்தயத்தில் Baskoeten racing டீமுடன் அஜித் கைகோர்த்திருந்தது உங்களுக்கு நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். நாமும் அதை பற்றி இங்கு பதிவு செய்திருந்தோம்.
கடந்த மாதம் பெல்ஜியத்தில் நடைபெற்ற பயிற்சியின் பொழுது அஜித் கார் விபத்துக்குள்ளான சமயத்தில் அவர்களால் உடனே மற்றொரு கார் ஏற்பாடு செய்து கொடுக்க முடியாத இக்கட்டான நேரத்தில் இதே Redant racing தான் AK racing டீமிற்கு கார் கொடுத்து உதவியது.

அதில் அவர் இரண்டாவதாக வெற்றி பெற்றது உலகறியும். அதன் பின் AK டீம் Redant racing டீமுடன் கைகோர்த்தது.
ஒவ்வொரு மணித்துளிகளும் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் அதிவேக கார் பந்தய உலகில் 45 நிமிடம் என்பது ஒரு யுகம். எனவே முதல் இடத்தில் பாய்ந்து கொண்டிருந்த AK racing டீம் ஐந்தாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இருப்பினும் Matheiu வந்து மிக லாவகமாக ஓட்டி அதை நான்காம் இடத்திற்கு உயர்த்தினார்.
விளையாட்டில் வெற்றி தோல்வி என்பது சகஜம், ஆனால் அந்த தோல்வியை நாம் எப்படி கையாள்கிறோம் என்பது தான் மிக முக்கியம்.
தோல்வி என்பது கண்டிப்பாக கவலையை தரும், ஆனாலும் அதிலிருந்து மீண்டு வருவது தான் ஒரு வீரனின் வெற்றியை தீர்மானிக்கிறது. அஜித் ஒரு மாவீரர் என்று நான் கூறி தான் உங்களுக்கு தெரிய வேண்டுமா என்ன?
போட்டி முடிந்து தன் சக வீரர்கள் வெற்றி கோப்பை பெறுவதை ரசிகர்களுடன் சந்தோசமாக கண்டுகளிக்கும் அந்த மனசு தான் சார் அவரை வியந்து பார்க்க வைக்கிறது.

அனைத்தும் முடிந்த பின்னும், சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் அங்கேயே இருந்து ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
12 மணிநேர தொடர் பந்தயத்தின் காரணமாக மிகவும் சோர்ந்திருந்தாலும், தன் ரசிகன் தனக்காக மணிக்கணக்காக காத்திருக்கிறான் என்ற ஒற்றை காரணத்திற்காக அவர் அந்த சோர்வை கூட பொருட்படுத்தாமல் புகை படம் எடுக்கும் பழக்கத்தை வைத்துள்ளார்.

அது இவர் அவரது ரசிகனை எவ்வளவு உயரத்தில் வைத்துள்ளார் என்று பறைசாற்றுகிறது. சென்ற முறை சந்தித்த பொழுது அவர் தல அஜித். இம்முறையோ பத்மபூஷன் அஜித். ஆனால் அது பெயரளவில் மட்டுமே, அவரிடத்தில் சிறு மாற்றமும் இல்லை. அதே நம்ம தல அஜித் தான்.
இவர் இப்படி என்றால், இவரின் ரசிகர்கள் வேற லெவல். அவர்களை புரிந்து கொள்ளவதும் எளிதல்ல.
கனடாவில் இருந்து சிலர் வந்திருந்தார்கள், லண்டனில் இருந்து பலர் வந்திருந்தனர். இத்தாலியின் Palermo நகரத்திலிருந்து பல குடும்பங்கள் வந்திருந்தது. மேலும் ரோம், மிலன் என்று இத்தாலியின் பல இடங்களில் இருந்து ரசிகர்கள் குவிந்திருந்தார்கள்.
அவர்களில் பலருடன் உரையாடும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. ஒவ்வொருவருக்கும் அவர் மீது எல்லையில்லா காதல். உலகின் பல எல்லைகளில் இருந்து வந்திருந்தாலும் அவரை தூரத்தில் இருந்து பார்த்து பரவசமடைவதையே பாக்கியமாக கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.
ஒவ்வொரு பந்தயத்திலும் எங்கள் அஜித் ரசிகர் எனும் குடும்பம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது. லண்டன்-லிருந்து வந்த தினேஷ் மற்றும் அகிலா, ஸ்பெயின்-ல் இருந்து வந்த ரெங்கா, பாரிஸில் இருந்து வந்த, நான் பெயர் மறந்த சொந்தங்களாகட்டும், எங்களை இணைக்கும் ஒரே புள்ளி – அஜித் எனும் ஆளுமை மட்டுமே.
40 வருடமாக Palermoவில் வாழ்ந்து வரும் இந்த தமிழ் குடும்பத்தை கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பந்தயத்திலும் கண்டிருந்தேன்..

GBU சட்டை அணிந்திருந்த அவர் பெயர் ராஜா. அவர் அஜித் பற்றி பேச துவங்கினால் நா தளுதளுக்கிறது. அவ்வளவு emotion.
மற்றொருவர் இவரையும் மிஞ்சிவிடுவார். அவரையும் நான் சென்ற பந்தயத்தில் சந்தித்து இருக்கிறேன். இம்முறையும் அஜித் புகைப்படங்களும் போஸ்டர்களும் சூழ வந்துவிட்டார். அவரது ஒரே சந்தோசம் – அஜித் புகைப்படங்களை பிடித்து கொண்டே நிற்பது, எட்டி நின்று கொண்டே அவரை ரசிப்பது. அவ்வளவே.

காட்ஜில்லா அளவு காதல் இருந்தாலும் ஒரு நாய் குட்டி போன்று சைலெண்டாக தூரத்தில் நின்று அவரை ரசிக்கவே பல்லாயிர மைல்களுக்கு அப்பால் இருந்து வரும் கூட்டம் என்னை ரொம்பவே ஆச்சரியப்படுத்தியது.

இவர்களது இந்த violent காதல் பற்றி நான் அறிந்தும் silent-ஆக கடந்து விட்டால் நியாயமில்லை. ஒவ்வொரு முறையும் அஜித்குமார் அவர்களை சந்திக்கும் பொழுது இதை அவருடன் பகிர துடித்தேன். ஆனாலும், என்ன மாயமோ தெரியவில்லை, அவரை சந்திக்கும் பொழுது அனைத்தும் மறந்து தான் போகிறது.

காரணம்? அந்த சிரிப்பு தான் சார்.
பூக்களை சுற்றித்திரியும் தேனீக்கள் கூட, அந்த பூக்களில் இருந்து தேன் கொண்டு செல்கிறது. ஆனால் இவர்களோ இவர் உருவத்தை தங்கள் விழிகளின் வழியாக இதயத்தில் சிறை வைப்பதை தவிர வேறு எதையும் எதிர்ப்பார்ப்பதில்லை.
அப்படிப்பட்ட சுயநலமில்லா இவர்களின் மாசில்லா காதலை அந்த காதல் மன்னனுக்கு தெரிவிக்க, இராமாயணத்தில் வரும் அணில் போல், என்னால் இயன்ற சிறு முயற்சி தான் இந்த மடல்.
இது அவரது கண் பார்வையில்படுமா?
குடும்பம், சினிமா, கார் பந்தயம் என்று தேனீ போலே சுற்றி கொண்டிருக்கும் அவர் கண்களில் இது படாது என்று அறிவு கூறினாலும், படாதா என்று எனது மனம் படபடத்து கொண்டுதான் இருக்கிறது.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.