
தமிழ்நாட்டில் ஆறு ராஜ்யசபா சீட் காலியாக போகிறது. இதைக் குறி வைத்து திமுக – அதிமுகவுக்குள் போட்டா போட்டி நிலவுகிறது. ‘கமலுக்கா… வைகோவுக்கா..?’ என பெரிய யுத்தமே திமுக கூட்டணியில் நடக்கிறது. இன்னொரு பக்கம் ஜெயக்குமார், செம்மலை, கோகுல இந்திரா, விந்தியா என அதிமுகவுக்குள்ளும் ஆயிரமாயிரம் பஞ்சாயத்துகள். யாருக்கு சீட்டை ஒதுக்குவது என நெருக்கடியில் உள்ளாரா எடப்பாடி. ஒற்றை ராஜ்யசபா சீட்டு எதிர்பார்த்து அன்புமணியும் பிரேமலதாவும் காய் நகர்த்துகிறார்கள். இன்னொரு பக்கம் ‘மிஷன் தமிழ்நாடு’ என்கிற திட்டத்தோடு, பவன் கல்யாணை வைத்து பவர் காட்டத் துடிக்கும் பாஜக.