
பஹல்காம்: “சுற்றுலா என்பது மோதல்களுக்கு இடமில்லாத ஒரு செயலாக இருக்க வேண்டும். மீண்டும் மீண்டும் ஜம்மு காஷ்மீரின் சுற்றுலா அரசியலில் சிக்குகிறது. ஜம்மு காஷ்மீர் எதிர்கொள்ளும் சூழ்நிலையிலிருந்து சுற்றுலாத் துறை தனிமைப்படுத்தப்படுவதை எனது அரசு உறுதி செய்யும்” என்று அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு தெற்கு காஷ்மீரின் பஹல்காமில் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா இன்று அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், “சுற்றுலா என்பது மோதல்களுக்கு இடமில்லாத ஒரு செயலாக இருக்க வேண்டும். சுற்றுலா என்பது பொருளாதாரத்தை மேம்படுத்துவது மற்றும் வாழ்வாதாரத்தை ஈட்டுவதற்கான ஒரு வழியாகும். மீண்டும் மீண்டும் ஜம்மு காஷ்மீரின் சுற்றுலா அரசியலில் சிக்குகிறது. ஜம்மு காஷ்மீர் எதிர்கொள்ளும் சூழ்நிலையிலிருந்து சுற்றுலாத் துறை தனிமைப்படுத்தப்படுவதை எனது அரசு உறுதி செய்யும். சுற்றுலாவை வேறு எதையும் விட முக்கியமான ஒரு பொருளாதார நடவடிக்கையாக அனைவரும் பார்க்க வேண்டும்.