
இருவாரங்களுக்கு முன் காங்கிரஸின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் டெல்லியில் ஒரு நூல் வெளியீட்டு விழாவில் பேசினார். நம் கட்சியின் மற்றொரு மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் மற்றும் மிருதுஞ்சய் சிங் யாதவ் ஆகியோர் எழுதிய புத்தக வெளியீட்டு விழா அது. இதில் ப.சிதம்பரம் வெளியிட்ட பல கருத்துகள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
சிதம்பரம் கருத்துகளுக்கு வலு சேர்க்கும் வகையில் இன்று இண்டியா கூட்டணியிலும், தேசிய அரசியலிலும் நிலவும் சூழல் மீது இக்கட்டுரை மூலம் நான் ஒரு பார்வை செலுத்த விரும்பினேன். ‘ஆபரேஷன் சிந்தூர்’, நாட்டின் அரசியல் சூழ்நிலையை குறிப்பிடத்தக்க வகையில் மாற்றியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் படிமத்தை இது ஒரு புறம் வலுப்படுத்தியுள்ளது.