புதுச்சேரி: “காரைக்கால் ஜிப்மர் மருத்துவமனை 2027-க்குள் இயங்கும். காரைக்காலில் புதுச்சேரி அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கும் கோரிக்கையை ஆலோசித்து வருகிறோம்” என்று மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் தெரிவித்தார்.
புதுவை ஜிப்மரில் ரூ.4.74 கோடியில் அவசர சிகிச்சை மற்றும் விபத்து சிகிச்சை பிரிவு புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா இன்று (மே 27) நடந்தது. மத்திய இணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் திறந்து வைத்தார்.