
சந்தீப் ரெட்டி வாங்கா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு தீபிகா படுகோனை பற்றியது தான் என்று பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கவுள்ள ‘ஸ்பிரிட்’ படத்தின் நாயகியாக ஒப்பந்தமாகி பின்பு விலகிவிட்டார் தீபிகா படுகோன். அவருக்கு பதிலாக திருப்தி டிம்ரி ஒப்பந்தமாகி இருக்கிறார். தீபிகா படுகோன் விலகலுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது. நேற்று சில ஊடகங்களில், இப்படத்தில் நிறைய நெருக்கமான காட்சிகள், சண்டைக் காட்சிகள் இருப்பதாகவும் கண்டிப்பாக ‘ஏ’ சான்றிதழ் தான் எனவும் செய்திகள் வெளியாகின.