
பிரபல சின்னத்திரை நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா தனது மூன்றாம் ஆண்டு திருமண நாளில் மறைந்த தனது கணவர் அரவிந்த் சேகர் பற்றி உருக்கமான பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “ இனிய மூன்றாம் ஆண்டு திருமண நாள் வாழ்த்துக்கள் அரவிந்த் சேகர். உன்னுடைய அரவணைப்பை நான் மிஸ் செய்கிறேன். உன்னுடைய பூக்களும், வாழ்த்துக்களும் இன்று எனக்கு இல்லை.
நீ என் அருகில் இல்லாததை உணர்கிறேன். ஆனால் நாம் ஒன்றாக உருவாக்கிய அழகான நினைவுகளுடன் நம்முடைய சொந்த உலகத்தில் வாழ்கிறேன்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், நம்முடைய எதிர்காலம் எவ்வளவு பிரகாசமாக இருக்கும் என்று நிறைய கனவுகளையும், கற்பனைகளையும் கொண்டிருந்தோம்.
நம்முடைய கனவுகளையும், ஆசைகளையும் மெல்ல மெல்ல நிறைவேற்றி, நீ எனக்குக் கற்றுத் தந்த தைரியமான பாடங்கள், அனுபவங்கள் மற்றும் ஞானத்துடன் ஒவ்வொரு அடியையும் முன்னோக்கி எடுத்து வைக்கிறேன்.
எப்போதும் உன்னுடையப் பெருமைமிக்க மனைவியாக இருப்பேன். என்றென்றும் நான் உன்னுடைய ஸ்ருதி, அரவிந்தின் ஸ்ருதி” என்று உருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…