
பாசிம் மேதினிபூர்: இந்தியா மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தான் இல்லாமல் அழிந்துபோகும் என்று மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் பாசிம் மேதினிப்பூரில் பேசிய அம்மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ், “நாடு பயங்கரவாத செயல்களை பொறுத்துக்கொள்ளாது என்பதை எதிர்க்கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே அவர்கள் நாட்டிற்காக பேச வேண்டும். பயங்கரவாதிகள் பஹல்ஹாமில் 'சிந்தூர்( குங்குமம்)' பார்த்து மக்களைக் கொன்றனர். அதனால்தான் ஆபரேஷன் சிந்தூர் நடந்தது. அவர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தினால், பாகிஸ்தான் இல்லாமல் போய்விடும்.