• May 27, 2025
  • NewsEditor
  • 0

பாமக தலைமை இடம் விழுப்புரம் மாவட்டமாக இருந்தாலும் தருமபுரி மாவட்டத்தில் தான் பாமக-வை கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கும் வாக்காளர்கள் கணிசமாக இருக்கிறார்கள். அதனால் தான் 2014-ல் தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு எம்பி ஆனார் அன்புமணி ராமதாஸ். 2019 தேர்தலில் இங்கு மீண்டும் போட்டியிட்ட அன்புமணி, திமுக-விடம் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார். இருந்த போதும் 2024 தேர்தலில் தனது மனைவி சவுமியாவை இங்கு நிறுத்தினார் அன்புமணி. இம்முறை திமுக வேட்பாளருக்கு சரியான போட்டியைக் கொடுத்த சவுமியா, முதல் சுற்றுகளில் முன்னணியில் இருந்தாலும் இறுதிச் சுற்றுகளில் சுமார் 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார்.

தரு​மபுரி மாவட்​டத்​தைப் பொறுத்​தவரை கடந்த தேர்​தல்​களில் தோற்​றாலும் பாமக கவுர​மான இடத்​தையே பெற்று வந்​திருக்​கிறது. 2021 சட்​டமன்​றத் தேர்​தலில் அதி​முக கூட்​ட​ணி​யில் களம்​கண்ட பாமக, தரு​மபுரி மாவட்​டத்​தில் இரண்டு தொகு​தி​களில் வெற்​றி​பெற்​றது. அந்​தளவுக்கு இந்த மாவட்​டத்​தில் பாமக-வுக்கு தனித்த செல்​வாக்கு இன்​றைக்​கும் இருக்​கிறது. இதை கணக்​கில் வைத்து 2026 சட்​டமன்​றத் தேர்​தலிலும் சவுமியா அன்​புமணியை இந்த மாவட்​டத்​தில் ஏதாவதொரு தொகு​தி​யில் நிறுத்தி பல்ஸ் பார்க்க தயா​ராகி வரு​கிறது பாமக தலை​மை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *