
தேர்தலுக்கு கட்சியினரை தயார்படுத்துவதற்காக மண்டல வாரியாக பொறுப்பாளர்களை மாய்ந்து மாய்ந்து அறிவித்துக் கொண்டிருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின். ஆனால், கட்சித் தலைமையால் மூன்று மாதங்களுக்கு முன்பு மாநகரச் செயலாளராக அறிவிக்கப்பட்ட ஒருவருடன் கீழ்மட்ட நிர்வாகிகள் ஒத்துழையாமை இயக்கம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். புதுக்கோட்டையில் தான் இந்தக் கூத்து.
புதுக்கோட்டை மேயர் திலகவதியின் கணவர் செந்தில் தான் புதுகை மாநகர திமுக செயலாளராக முன்பு இருந்தார். உடல்நலக் குறைவால் கடந்த டிசம்பரில் அவர் திடீரென உயிரிழந்தார். மகனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் இந்தச் சம்பவம் நடந்தது மாநகர திமுக-வினரை நிலைகுலையச் செய்தது.