
சென்னை: ‘‘வாடகை ஒப்பந்தம் குறித்து பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டதால், போராட்டம் தொடரும்’’ என டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் முனையம் செயல்பட்டு வருகிறது. இங்கு எண்ணூர், காமராஜர் துறைமுகத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலிய பொருட்கள் கொண்டு வரப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது.