
அமராவதி: ஆந்திராவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளது. இதனால் கடப்பா, சத்யசாய் மாவட்டங்கள் உட்பட மாநிலத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதுபோல் தெலங்கானாவிலும் நேற்று முதல் மழை பெய்து வருகிறது.
ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு தெலுங்கு மாநிலங்களிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.