
‘காதல் மட்டும் வேணா' படத்தை இயக்கி நடித்த சமீர் அலி கான், தற்போது ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு' என்ற படத்தை, சூப்பர் ஸ்டார் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரித்து இயக்கி, நாயகனாக நடித்துள்ளார். மான்சி நாயகியாக நடித்துள்ள இதில் ஆடுகளம் நரேன், பிரம்மாஜி, ஆலி, சோனியா போஸ், மாலா பார்வதி, தீபிகா அமின், உதயதீப், கும்கி அஸ்வின் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
“இரண்டு வெவ்வேறு பின்னணிகளைக் கொண்ட நாயகனும் நாயகியும் காதலில் விழுகின்றனர். இவர்கள் காதலுக்கு எத்தகைய இடையூறுகள் எழுகின்றன? அதை எப்படிக் கடந்து எவ்வாறு இணைகின்றனர் என்பதைக் கலகலப்பான முறையில் இந்தப் படத்தில் கூறி இருக்கிறோம்” என்கிறார் சமீர் அலிகான்.