
சென்னை: தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 6 மாநிலங்களவை எம்.பி. பதவிகளில், திமுக சார்பில் ஒரு இடம் கமல்ஹாசனுக்கு வழங்கப்பட உள்ளாதாக கூறப்படுகிறது.
அதிமுக கூட்டணியில் பாமக இல்லாததால் மீண்டும் அன்புமணிக்கு எம்.பி. பதவி கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது. தமிழகம் சார்பில் மாநிலங்களவை எம்.பி.க்களாக உள்ள வைகோ, அன்புமணி, பி.வில்சன், எம்.சண்முகம், என்.சந்திரசேகரன், எம்.முகமது அப்துல்லா ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை 27-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், இந்த 6 மாநிலங்களவை பதவிகளுக்கான தேர்தலை, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.